“முதல்வர் உடனடியாக செயல்படவேண்டும்” – வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள் மற்றும் உச்சநீதிமன்றம் :

0
90

செந்தில் பாலாஜி தொடர்பான சட்ட பிரச்சினைகள் தமிழக அரசின் அமைச்சரவை கட்டமைப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய உச்சநீதிமன்றம், ஜாமீன் வழங்கப்பட்டபோதும், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது ஏன்? என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

 

போக்குவரத்து துறையில் இருந்த வேலைவாய்ப்பு முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜி மீது ஏற்கனவே குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில், அவர் பிணை பெற்ற பின்னும் அமைச்சராக தொடருவதை, வழக்கின் சாட்சிகளுக்கு அழுத்தம் தரும் நடவடிக்கையாகக் காணப்படுகிறது. இதனால், உச்சநீதிமன்றம் தமிழக அரசிடம், செந்தில் பாலாஜி பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

 

இந்த சூழலில், பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, தமிழக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து, “உச்சநீதிமன்றத்தின் கேள்விகளை தயவுகூர்ந்து கவனிக்க வேண்டும். இல்லையெனில், அது தமிழக அரசின் நியாயத்தையும், அதன் வழிமுறைகளையும் கேள்விக்குறியாக்கும்,” என குறியிட்டுள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து, பாமக நிறுவனர் டாக்டர் இராமதாஸ், செந்தில் பாலாஜி பதவியில் தொடர்வதுபதவியில் நீடிப்பதால் நீதிமுறை தகுதியில் பாதிப்பேற்படும் என்றால், அவரை அமைச்சரவையிலிருந்து நீக்குவதற்கும்,நீதிமுறையின் தகுதியை பாதிக்கக் கூடும் எனக் கூறி, முதல்வரிடம் அதனைச் சரிசெய்யும் நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து, பாமக நிறுவனர் டாக்டர் இராமதாஸ், செந்தில் பாலாஜி பதவியில் தொடர்வது நீதிமுறையின் தகுதியை பாதிக்கக் கூடும் எனக் கூறி, முதல்வரிடம் அதனைச் சரிசெய்யும் நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார். மேலும் வழக்கை மற்றொரு மாநில நீதிமன்றத்திற்கு மாற்றும் தீர்மானம் எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.