சிபிஐயின் வைர விழாவை பிரதமர் நாளை தொடங்கி வைக்கிறார்!!
மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) வைர விழா கொண்டாட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி புது டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நாளை தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியின் போது, சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம் மற்றும் சிபிஐயின் சிறந்த புலனாய்வு அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி தங்கப் பதக்கங்களை வழங்கவுள்ளார். மேலும், ஷில்லாங், புணே, நாகபூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிபிஐ அலுவலக வளாகங்களையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.
சிபிஐயின் வைர விழா கொண்டாட்ட ஆண்டைக் குறிக்கும் தபால்தலை, நினைவு நாணயத்தை அவர் வெளியிடவுள்ளார். சிபிஐயின் ட்விட்டர் பக்கத்தையும் அவர் தொடங்கி வைக்கவுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் தீர்மானத்தின் வாயிலாக மத்திய புலனாய்வு அமைப்பு 1963-ஆம் தேதி ஏப்ரல் 1-ஆம் தேதி நிறுவப்பட்டது.