Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி! துடிப்பு மிகு தமிழ்ச்சமூகம் என பாராட்டு!!

தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி! துடிப்பு மிகு தமிழ்ச்சமூகம் என பாராட்டு!!

தமிழக மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி டுவிட்டரில் தமிழில் பொங்கல் நல்வாழ்த்து தெரிவித்துள்ளார். மார்கழியின் கடைசி நாளான நேற்றிலிருந்து பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பல வண்ணங்களில் கோலமிட்டு வீடுகளை புதுப்பித்தும் அலங்கரித்து, பச்சரிசி பொங்கலிட்டு சூரிய பகவானுக்கும், முன்னோர்களுக்கும் படைத்து மக்கள் வழிபட்டு வருகிறார்கள்.

பொங்கல் பண்டிகை சாதி, மதம் கடந்து அனைத்து தமிழர்களும் கொண்டாடி வரும் மிக சிறப்பான பண்டிகையாகும். இந்து, இசுலாம், கிறித்தவம் போன்ற அனைத்து மதத்தினரும் இயற்கையை வணங்கி கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் உலகெங்கும் முழுவதிலும் உள்ள துடிப்பு மிகு தமிழ் சமூகம் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகிறது.

அவர்களுக்கு என்னுடைய பொங்கல் வாழ்த்து. இந்த பொங்கல் திருநாள் எல்லையற்ற வளங்களால் நிரம்பிடட்டும், அனைவரும் சிறப்பான நல்வாழ்வு பெற்றிடட்டும் என கூறியுள்ளார்.

மேலும் சங்கராந்தி, மாக் பிகு போன்ற பண்டிகைகளுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Exit mobile version