பிரதமருடைய ஜாக்பாட் ஆப்பர்! இனி நீட் தேர்வுக்கு பை பை!
சில மாதம் முன் அதிக அளவு கொரோனா தொற்று காரணமாக சிபிஸ்இ பயிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை ரத்து செய்தும் தள்ளியும் வைத்தனர்.தற்போது நமது பாடத்திட்டத்தின் படி மருத்துவ படிப்பு படிக்க நினைக்கும் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு மருத்துவ கல்லூரியில் படிக்க முடியும் என்ற விதிமுறையை கொண்டு வந்தனர்.வருடம் வருடம் இந்த நீட் தேர்விற்கு பல எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தான் உள்ளது.இருப்பினும் ஓர் வருடம் கூட தவறாமல் நடந்து வருகிறது.இந்த மருத்துவ முதுநிலை படிப்பிற்கான நீட் தேர்வானது வரும் 18-ம் தேதி நடத்தப்படும் என கூறியிருந்தனர்.அதனையடுத்து தற்போது அதிக அளவு கொரோனா தொற்று பரவி வருகிறது.இந்த சூழலில் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினால் அதிக அளவு தொற்று பரவ வாய்ப்புகள் உள்ளது.
அதனால் பிரதமர் நரேந்திரமோடி எம்டி,எம்எஸ் உள்ளிட்ட முதுநிலை மருத்துவ பட்டப் படிப்பிற்கான நீட் தேர்வை குறைந்தது 4 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது என கூறினார்.இந்த கொரோனா காலத்தில் அதிக அளவு மருத்துவர்கள் ஈடுபட செய்யும் விதமக எடுக்கப்பட்டதால் மோடி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.
அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு மிகப்பரிய ஜாக்பாட் சலுகை ஒன்றை கூறியுள்ளார்.கொரோனா தொடர்பாக ஈடுபடும் 100 மாணவர்களுக்கு இனி அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் பிரதமர் நரேந்திரமோடியின் அலுவலகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதனால் மாணவர்கள் ஆர்வத்துடன் கொரோனா பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.