Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனா பரவல்! உஷார் ஆனது மத்திய அரசு!

நாடு முழுவதும் சென்ற வருடம் மார்ச் மாதத்திலிருந்து கொரோனா வேகமாக பரவத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டன நாடு முழுவதும் முழு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டனர்.அதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த தொற்றின் வேகம், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பல விஷயங்களையும் கண்காணிக்க தொடங்கினார். இதனால் சுகாதார பணிகள் அனைத்தும் தமிழகத்தில் முடுக்கிவிடப்பட்டன. இதனை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா வெகுவாக குறையத் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் தமிழ் நாட்டிற்கான சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்ததில் இருந்து மாநில அரசின் கட்டுப்பாடு அதிகாரிகள் வசம் சென்றது.
இதனைத்தொடர்ந்து கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கிவிட்டது. இதனையடுத்து மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை தற்சமயம் மேற்கொண்டு வருகின்றது.

அதோடு இந்த தொற்று வேகமாக பரவத் தொடங்கியது. தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொது மக்கள் எல்லோரும் தேடத் தொடங்கிவிட்டார்கள். சுற்றுக்காலம் என்று கூட பார்க்காமல் தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவர் செய்த அதிரடி ஆய்வுகளின் விளைவாக தமிழ்நாட்டில் சுகாதார பணிகள் எல்லாம் சிறப்பாக நடைபெற்று வந்தது.

ஆனால் திடீரென்று தேர்தல் வந்ததன் காரணமாக, தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்ததால் அவர் சரிவர செயல்பட இயலாத ஒரு நிலை ஏற்பட்டது. அதன் முடிவில் இந்த தொற்று மீண்டும் பரவ தொடங்கியதால் பொதுமக்கள் எல்லோரும் அவரை மீண்டும் தேடத் தொடங்கியிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு களும் வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கின்றன. மகாராஷ்டிரா மாநிலம் இந்த தொற்று பரவலில் முதல் இடத்தில் உள்ளதால் அங்கே பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருக்கின்றது.

அதோடு தடுப்பூசி திருவிழாவும் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. தமிழ்நாட்டில் எதிர்வரும் 14ஆம் தேதி இந்த தடுப்பூசி திருவிழா ஆரம்பமாகிறது. இந்த நிலையில், இந்த நோய்த்தொற்றின் பரவல் மற்றும் தடுப்பூசி போடுவது தொடர்பாக பிரதமர் மோடி மாநில ஆளுநர்கள் உடன் ஆலோசிக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு போன்றோர் காணொளி மூலமாக ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. ஏற்கனவே முதல் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், நாளை மாநில ஆளுநர்கள் உடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version