Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரதமரின் புதிய திட்டம்!! இந்திய காப்பீட்டில் FDI முதலீட்டு வரம்பு முடிவு!!

Prime Minister's New Plan!! Limit on FDI Investment in Indian Insurance!!

Prime Minister's New Plan!! Limit on FDI Investment in Indian Insurance!!

மத்திய அரசு காப்பீட்டு துறையில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் பிரதமர் மோடி தலைமையில் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வெளியாகியுள்ள தகவல் படி மத்திய அரசு குளிர்கால கூட்டத்தொடரில் இந்திய காப்பீட்டு துறையில் நேரடி அன்னிய முதலீட்டை (FDI) 100% ஆக உயர்த்த பரிந்துரை மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புக்கு பின்பு மக்கள் மத்தியில் இன்சூரன்ஸ் குறித்த விழிப்புணர்வு பெரிய அளவில் அதிகரித்துள்ளது, ஆனாலும் இன்னும் அதிகப்படியான மக்கள் இன்சூரன்ஸ் பாதுகாப்பு பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் மக்களிடையில் காப்பீடு திட்டங்கள் குறித்த முக்கியத்துவத்தை கூட்டவும், காப்பீடு திட்டங்களை போடும் மக்களுக்கு அதன் பலன்களை அதிகமாக அளிக்கும் வகையிலும் மத்திய அரசு இந்திய காப்பீட்டு திட்டத்தின் கீழ் எஸ்பிஐ முதலீட்டை கொண்டு வர முடிவு செய்துள்ளது.

இந்த நடவடிக்கையால் உலகளாவிய காப்பீட்டு நிறுவனங்கள் இந்திய சந்தையில் நேரடியாக நுழைய வாய்ப்பை பெறும். தற்போது இந்திய காப்பீட்டு துறையில் FDI முதலீட்டு வரம்பு என்பது 74% ஆக மட்டுமே உள்ளது.

மேலும், இந்த வரம்பை உயர்த்துவதன் மூலம், அரசு அதிகளவிலான வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க முடியும், இதேபோல் ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்திய நிறுவனத்தின் துணை இல்லாமல் இயங்கி சேவை அளிக்க முடியும். இதன் மூலம் இன்சூரன்ஸ் துறையின் வளர்ச்சியை துரிதப்படுத்தி, நிதி நிலையை மேம்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தியாவில் 24 ஆயுள் காப்பீடு நிறுவனங்கள், 26 பொது காப்பீட்டு நிறுவனங்கள், 6 தனிநபர் சுகாதார காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் ஒரு மறுகாப்பீட்டு நிறுவனம் (General Insurance Corporation) உள்ளன. இந்த நிலையில் இப்பிரிவில் FDI வரம்பை 100% ஆக உயர்த்துவதன் மூலம், மூலதனம் அதிகம் தேவைப்படும் இந்தத் துறையில் அதிகப்படியான நிதி பலத்துடன் புதிய நிறுவனங்கள் இந்தியாவுக்கு வரும். இந்த 100 சதவீத முதலீடு மூலம் இத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் SBI, ICICI, HDFC, டாடா மற்றும் பிர்லா போன்ற உள்நாட்டு வர்த்தக குழுமங்களுக்கும் பெரிய அளவிலான நிதி ஆதாரம் கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Exit mobile version