இந்த பயணத்தின் மூலம் இரு நாடுகளும் முக்கிய நட்புறவு நாடுகளாக மாறியது என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்திருந்தார். மேலும் இந்த பயணத்தில் அவர் குவைத் சென்ற பொழுது குவைத்தின் உயரிய சிவிலியன் விருதான ” மபாரக் அல் கபீர் ” விருது பிரதமர் மோடி அவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பயணம் வரலாற்று சிறப்புமிக்க பயணமாக பார்க்கப்படுவதற்கான காரணம் :-
இந்திய அரசை பொருத்தவரையில் அரசு முறை பயணம் குவைத்திற்கு மேற்கொள்ளப்படுவது என்பது 43 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது நிகழ்ந்திருப்பதால் இதனை வரலாற்று சிறப்புமிக்க பயணம் என்று தெரிவிக்கின்றனர். இதற்கு முன் 1981 பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்கள் குவைத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பிரதமரின் குவைத் பயணம் குறித்து அரபு ஊடகங்களின் பார்வை :-
முதலில் இந்திய பிரதமரின் வருகையானது இரு நாட்டிற்கும் இடையிலான பொருளாதார உறவை மேம்படுத்தும் என்று குவைத் நம்புவதாகவும், குவைத்தில் வாழக்கூடிய 43 லட்சம் மக்களில் 10 லட்சம் மக்களுக்கு மேல் இந்தியர்கள் தான் என்றும் அந்த ஊடகங்கள் தெரிவித்து இருக்கின்றன.
குவைத்தை பொறுத்தவரையில் அங்குள்ள மொத்த தொழிலாளர்களில் 30 சதவிகிதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குவைத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையிலிருந்து கால்வாசி பேர் இந்தியர்கள் என்பதால் இந்த பயணம் இருநாட்டையும் நட்புறவோடு வழிநடத்தவும் பொருளாதார உறவை மேம்படுத்தவும் மிக உதவியாக அமையும் என்றும் தெரிவித்து இருக்கின்றனர்.