Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இங்கிலாந்தின் மன்னராகிறார் இளவரசர் சார்லஸ்!

பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் மகாராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்ற இரண்டாம் எலிசபெத் உடல்நிலை மோசமான நிலையில், ஸ்காட்லாந்தில் இருக்கின்ற பால்மோல் அரண்மனையில் காலமானார் அவருக்கு வயது 96.

இந்த சூழ்நிலையில் பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நிலை கடந்த அக்டோபர் மாதம் முதலாகவே மோசமாக இருந்து வந்ததால் அவருடைய மகன் இளவரசர் சார்லஸ் தான் மகாராணி எலிசபெத்தின் வேலைகள் பெரும்பாலும் கவனித்து வந்தார்.

இந்த நிலையில், தற்சமயம் இரண்டாம் எலிசபெத் உயிரிழந்துள்ள சூழலில், அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக முன்கூட்டியே திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து எலிசபெத் மகன் சார்லஸ் பிரிட்டனின் அரசராக பொறுப்பேற்கவுள்ளதாகவும், அவருடைய மனைவி கமீலா சார்லஸ் ராணியாக பொறுப்பேற்பார் எனவும், தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

Exit mobile version