Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜப்பானில் பரபரப்பு! இளவரசிக்கு ஏற்பட்ட நோய் தொற்று பாதிப்பு!

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனாவால் பல நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்திருக்கின்றன அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை கதறவிடட கொரோனா ஜப்பான் நாட்டின் அரச குடும்பத்தையும் விட்டு வைக்கவில்லை.

ஜப்பான் நாட்டின் இளவரசி யாகோ இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது சென்ற 2 நாட்களாக காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த அவருக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு நோய்த்தொற்று சற்று தீவிரமாக உள்ளதால் தலைநகர் டோக்கியோவில் உள்ள இம்பீரியல் அரண்மனை வளாகத்திலிருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது.

அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. ஜப்பான் அரச குடும்பத்தில் நோய் தொற்றுக்கு ஆளான முதல் நபர் இளவரசி யாகோ என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version