Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விருதாச்சலம் கிளை சிறையில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்! போலீசார் விசாரணை!

விருதாச்சலம் சிறையிலிருந்து கைதி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

சிறைச்சாலை ஒரு சிந்தனை கூடம் என்று தெரிவித்தார், அறிஞர் அண்ணா ஆனால் இன்றோ சிறையில் இருந்து தான் எல்லா குற்றமும் நடக்கிறது.

சிறைக்குள் எல்லா வசதிகளும் இருக்கின்றது. செல்போன் முதல், கஞ்சா வரை, அனைத்து வசதிகளும் கிடைக்கப் பெறுகின்றது.

ஆனாலும் போதுமான அளவிற்கு மருத்துவ வசதி இல்லாத காரணத்தால், சிறையில் கைதிகள் இறக்கும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகின்றது.

அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் ஒரு திருட்டு வழக்கில் கைதாகி, விருதாச்சலம் கிளைச் சிறையில் இருந்துவந்தார் செல்வமுருகன். சென்ற அக்டோபர் மாதம் 30ஆம் தேதி நெய்வேலியில் ஒரு திருட்டு வழக்கில் கைதான இவர் சிறையில் வைக்கப்பட்டு இருந்தார்.

அதனைத்தொடர்ந்து ,செல்வமுருகன் உடல்நலக்குறைவால் துன்பப்பட்டு வந்து கொண்டிருந்த நிலையில், இன்று உயிரிழந்து இருக்கின்றார்.

சென்ற மாதம் பதினைந்தாம் தேதி கோவை மத்திய சிறையில் திருட்டு வழக்கில் கைதான, கொடைக்கானல், காந்திபுரம் பகுதியினை சேர்ந்த, சுரேஷ் ராஜா என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.

அதேபோல ஒரு கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கைதி, திருப்பதி சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version