Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கைதி தற்கொலை: விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது நடந்த விபரீதம்!

கைதி தற்கொலை: விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது நடந்த விபரீதம்!

சென்னையில் உள்ள அயம்பாக்கத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட விசாரணை கைதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மேலும் இது இளம் தலைமுறையினரை அதிகம் பாதிக்கிறது அவர்கள் போதையில் பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றது. இதனை தடுக்கும் வகையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தி வருகின்றனர்.

இதே போல் சென்னையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தெலுங்கானாவை சேர்ந்த ராயப்பன் ஷாஜி ஆண்டனி என்பவர் 48 கிலோ மெத்தபெட்டமைன் போதை பொருளை கடத்திச் சென்று சென்றுள்ளார். அவர் போதைப் பொருட்களுடன் சோழவரம் அருகே போலீசாரிடம் சிக்கினார்.

இதை அடுத்து மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு விசாரணைக்காக ராயப்பனை அழைத்துச் சென்றனர். அப்போது அவர் அலுவலகத்தில் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட கைதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version