Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் திடீர் தீ விபத்து!.. வெடித்து சிதறியதால் விரைந்து செயல்ப்பட்ட தீயணைப்பு வீரர்கள்!…

Private Bank ATM Sudden fire accident in the center!.. Firefighters rushed to work due to explosion!...

திருமுல்லைவாயல் அடுத்த அண்ணனூர் சிவசக்தி நகர் மெயின் ரோட்டில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் ஒரு செயல்பட்டு வருகிறது.இந்நிலையில்  நேற்று அதிகாலை இந்த ஏ.டி.எம் மையத்தில் திடீரென வெடித்து அதிக சத்தத்துடன் வெடித்து கரும்புகை வெளியேறியது.

இதனால் அருகில் வசிப்பவர்கள் ஓடிவந்து பார்த்தபோது ஏ.டி.எம். மையத்தில் தீப்பிடித்து எரிவது தெரிய வந்தது. இதுபற்றி தகவலறிந்து வந்த ஆவடி தீயணைப்புதுறை  நிலைய வீரர்கள், ஏ.டி.எம். மையத்தில் எரிந்த தீயை உடனடியாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

முன்னதாக ஏ.டி.எம் மையத்திற்கு செல்லும் மின் இணைப்பை மின்வாரிய ஊழியர்கள் துண்டித்தனர்.ஏ.டி.எம் மையத்திலுள்ள மின்சார பெட்டியில் ஏற்பட்ட உயர் மின்னழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

உரிய நேரத்தில் தீயை  அணைக்கப்பட்டதால் ஏ.டி.எம் எந்திரத்தில் தீப்பிடிக்காமல் தடுக்கப்பட்டது. இதனால் சுமார் ரூ.4 லட்சம் ரூபாய் பணம் தப்பியது.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Exit mobile version