போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள்! 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தம்!!

0
127

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள்! 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தம்!!

அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை தொடர்ந்து கேரளாவில் பேருந்து பயணச்சீட்டு (டிக்கெட்) கட்டணத்தை உயர்த்தக் கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதையொட்டி பேருந்து நிறுத்தங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

அதிகரித்து வரும் டீசல் விலை உயர்வை சமாளிக்க முடியாது என்பதால் பேருந்து பயணச்சீட்டு கட்டணத்தை உயர்த்தக் கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இது தொடர்பாக விடுத்த கோரிக்கையை ஏற்ற கேரள அரசு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது.

இந்நிலையில் கோரிக்கை விடுத்து நான்கு மாதங்கள் ஆகியும் கேரள அரசு அது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது. இதனால் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வேலைநிறுத்தம் தொடர்பாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் கேரள அரசிடம் கடிதம் அளித்தனர்.

இதனை தொடர்ந்து இன்று முதல் கேரளாவில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். போராட்டம் காரணமாக 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. போராட்டம் தொடர்பாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூறுகையில்,

கேரளாவில் தனியார் பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.12 ஆகவும், மாணவர்கள் பயணம் செய்வதற்கான கட்டணத்தை ரூ.6 ஆகவும் நிர்ணயம் செய்ய வேண்டும் என கூறியிருந்தோம். ஆனால் கேரள அரசு இதுவரை இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே, இதற்கு முடிவு தெரிந்த பின்னரே வேலை நிறுத்தத்தை கைவிடுவோம் என்றனர்.