லட்சக்கணக்கில் லாபம் சம்பாதிக்கும் தனியார் பயிற்சி மையங்கள்!
தற்போது தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமும , ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையமும் அடுத்தடுத்து போட்டித் தேர்வுகளை அறிவித்துள்ளது.
மே மாதம் யூ.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து இரண்டரை மாதங்கள் கழித்து மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(SSC) நடத்தும் சி.ஜி.எல் தேர்வு நடைபெற உள்ளது. பிறகு நவம்பர் மாதம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது. இதனை கவனத்தில் கொண்டு அரசு பணியை தங்கள் கனவாய் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களும் தேர்வர்களும் அதிதீவிரமாக தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
இவர்கள் அதிகாலை எழுந்து படிப்பத்துடன், இரவு 12 மணி நேரம் வரை தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்கின்றனர். 2020 ஆம் ஆண்டு கொரோனா நோய் தொற்று ஏற்பட்ட காலத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அப்போது நிறைய தனியார் நிறுவன ஊழியர்கள் வேலை இழப்பு ஏற்பட்டது. உடனே சுதாரித்துக் கொண்ட ஊழியர்கள் தனியார் நிறுவனங்களை நம்பினால் பாதியில் நம்மை நிறுத்தி விடுவார்கள் என்று புரிந்து கொண்டு, அரசுப் போட்டித் தேர்வுக்கு தயாராக தொடங்கி உள்ளனர்.
இதனை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தில் ஏராளமான தனியார் போட்டித்தேர்வு பயிற்சி நிறுவனங்கள் ஒவ்வொரு நபரிடம் இருந்தும் ஆயிரக்கணக்கில் கட்டணமாக பணம் வசூலிக்கின்றனர். ஒரு பயிற்சி மையத்தில் ஒரு தேர்வுக்கு 30-லிருந்து 100 பேர் கூட சேர்கின்றனர். அப்படி என்றால் மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசு நடத்தும் போட்டித் தேர்வில் மொத்தமாக 100,200 பேருக்கு மேல் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்கின்றனர்.
மொத்தமாக தனியார் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் லட்சக்கணக்கில் லாபம் பார்க்கின்றனர். தமிழகத்திலும் புதிது, புதிதாக பல்வேறு மாவட்டங்களில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் போட்டித் தேர்வில் வெற்றிபெற்ற வெற்றியாளர்கள் கூறுவது, “நாம் எந்தவொரு பயிற்சி மையங்களுக்கு செல்லாமல், தானாக படித்துக் கூட போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம் என்பதே அவர்களுடைய கருத்தாக உள்ளது.