Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியாவில் செயல்படுத்தப்படும் தனியார் ரயில்களை இயக்க 23 நிறுவனங்கள் ஆர்வம்

Private Companies are Interested to Run Train

Private Companies are Interested to Run Train

நாடு முழுவதும் உள்ள 12 பெரும் நகரங்களிலிருந்து 109 வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் ரயில்களை இயக்குவதற்கான தனியார் நிறுவனங்களை தேர்வு செய்வதற்காக முதற்கட்ட விண்ணப்ப கூட்டம்  காணொலி காட்சி மூலமாக நேற்று நடைபெற்றுள்ளது.
மேலும் தற்போது நாடு முழுவதும் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் ரெயில்களுடன் கூடுதல் ரயிலாக இவைகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். விரைவில் இதற்காக ஏல முறையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ள ரயில்வே நிர்வாகம் மார்ச் 2023 ஆம் ஆண்டுக்குள் தனியார் ரயில்களை இயக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளது.
இவ்வாறு தனியார் நிறுவனங்கள் மூலமாக ரயில்களை இயக்குவது என்பது ரயில்வேயை தனியார் மயமாக்கும் நடவடிக்கை இல்லை என்று  மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். இவ்வாறு தனியார் நிறுவனங்கள் மூலமாக ரெயில்களை இயக்குவதன் வழியாக பெரும்பாலான ரயில் பயணிகளே அதிக பலன் அடைவர் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Exit mobile version