பெண்கள் தனது மாதவிடாய் நேரத்தில் வலியை மட்டும் அனுபவிக்காமல் கூடவே மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றார்கள்.
திருமணமான பெண்களுக்கு இந்த நேரத்தில் தன் கணவனை தவிர நல்ல ஆறுதல் வேறு யாரும் இருந்திட முடியாது.
அந்நேரத்தில் தனது மாணவிகளோடு கணவன்மார்கள் இருக்க வேண்டும் என்ற நோக்கில் பெங்களூரில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனங்களான ஸ்டார்ட்அப் மற்றும் ஹார்சஸ் ஸ்டேபள் என்ற நிறுவனங்கள் கணவன்மார்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளித்து அசத்தியுள்ளது.
அந்நிறுவனங்களில் 60 சதவீத பெண்களும் 40 சதவீத ஆண்களும் வேலைப்பார்த்து வருகின்றனர்.சிலபேர் தம்பதிகள் ஆகவும் நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர்.
அந்நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு அவர்களின் மாதவிடாயின் போது பெண்களுக்கு Rs 250 சிறப்பு சலுகையாக வழங்கி இரண்டு நாட்கள் கூடிய விடுப்பும் கொடுக்கிறது.அந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஆண்களுக்கு தனது மனைவியின் மாதவிடாயின் நேரத்தின்போது சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளித்துள்ளது.கணவன் மனைவியாக வேலை செய்யும் தம்பதியர்களுக்கு இருவருக்குமே சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளித்து அந்நிறுவனங்கள் அசத்தி வருகின்றனர்.
ஹார்சஸ் புரோடக்ஸன்ஸ் நிறுவனர் சலோனி அகர்வால் கூறுகையில், ‘‘மாதவிடாய் நாட்களில் பல பெண்கள் அடிவயிறு வலியால் மிகவும் சிரமப்படுவார்கள். இதுபோன்ற நேரத்தில் மன அழுத்தம் அதிகமாக இருக்கும் நிலையில் அவர்களுக்கு விடுமுறை
வழங்குவதுடன் கணவரும் அருகில் இருந்தால் மிகவும் நம்பிக்கையாக பெண்கள் உணர்வார்கள்’’ என்றார்.
இந்த விடுமுறையை நாங்கள் மருத்துவ விடுப்பாக கூட கணிக்கில் எடுப்பதில்லை என்று அந்த நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார். நிறுவனத்தின் இந்த அறிவிப்பை தம்பதியாக வேலைபார்க்கும் ஊழியர்கள் மனதார வரவேற்றுள்ளனர்..