Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரசு விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு மாணவச் செல்வங்களின் உயிருடன் விளையாடும் தனியார் கல்வி நிறுவனங்கள்!

அரசு விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு மாணவச் செல்வங்களின் உயிருடன் விளையாடும் தனியார் கல்வி நிறுவனங்கள்!

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதான பட்டியில் சொர்ணம் பிள்ளை தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீ புவனேஸ்வரி நர்சரி & பிரைமரி ஸ்கூல் அமைந்துள்ளது இது தனியாருக்கு சொந்தமான மழலையர் கல்வி கூடம் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்ற எவ்வித அடிப்படை வசதியும் இன்றி செயல்பட்டு வருகிறது அப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தனியார் மற்றும் அரசு மழலையர் கல்வி கூடங்கள் மற்றும் நியாய விலை கடை அனைத்தும் மிகக் குறுகலான ஒரே கட்டிட வளாகத்தில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மிகுந்த மக்கள் நெருக்கடியும் போக்குவரத்து நெரிசலும் குழந்தைகளின் பாதுகாப்பற்ற தன்மையும் சுகாதாரங்களும் இன்றி குழந்தைகள் பெரும் அவதிக்கு உள்ளாகிவருகின்றனர்.சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த தனியார் கல்விக் கூடத்தை ஆய்வு செய்து பாதுகாப்பு சுகாதாரம் போன்றவற்றை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றது.உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா பொறுத்திருந்து பார்ப்போம் .?????

Exit mobile version