Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தலைநகர் சென்னையில் 40,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள்! தகுதி உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

சென்னையில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 15-ம் தேதி ராயப்பேட்டையில் அமைந்துள்ள நியூ கல்லூரியில் நடைபெறுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இதில் பங்கேற்று கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சென்னை மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் உள்ளிட்டவைகள் இணைந்து நடத்தும் இந்த முகாமில் 300க்கும் அதிகமான முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்றுக் கொள்ள உள்ளனர்.

சற்றேற குறைய 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளது இந்த முகாமில் 8ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரையில் மற்றும் ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங் பார்மசி மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் பங்கேற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த முகாமில் ஓய்வு பெற்றவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்தில் பல தனியார் வேலை வழங்கும் நிறுவனங்கள் பங்கேற்றுக் கொண்டு பல்வேறு கல்வித் தகுதிகளை அடிப்படையாகக் கொண்ட பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.

இந்த முகாமில் பங்கேற்றுக் கொள்ள விரும்புவோர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, உள்ளிட்டவற்றின் நகல்கள் மற்றும் சுய விவர குறிப்புடன், நேரில் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version