டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த தனியார் பள்ளி, தொழிற்சாலை!!! 60000 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்த நகராட்சி ஆணையர்!!!

0
86
#image_title

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த தனியார் பள்ளி, தொழிற்சாலை!!! 60000 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்த நகராட்சி ஆணையர்!!!

திருவேற்காடு நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா அவர்கள் டெங்கு கொசு உற்பத்தி ஆவதற்கு காரணமாக இருந்த தனியார் தொழாற்சாலை மற்றும் தனியார் பள்ளிக்கு ஒரே நாளில் 60000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

டெங்கு காய்ச்சல் என்பது தற்பொழுது அதிகமாக பரவத் தொடங்கிய உள்ளது. இந்தியாவில் தமிழகத்தில் இந்த டெங்கு கொசு அதிகமாக பரவி வருகின்றது. அரசும் இதற்கு தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை எடுத்து வருகின்றது.

இந்நிலையில் டெங்குக் காய்ச்சல் பரவாமல் தடுக்க திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் பரபரப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்காக திருவேற்காடு நகரமன்ற தலைவர் மூர்த்தி அவர்கள் வழங்கிய ஆலோசனையின் துப்புரவு அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் துப்புரவு தொழாலாளர்கள் டெங்கு கொசு ஒழிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

துப்புரவு தொழிலாளர்கள் மேற்கொள்ளும் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா அவர்கள் மேற்பார்வை செய்து வருகின்றார். இது குறித்து நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா அவர்கள் “நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசுக்களை ஏற்படுத்தும் கொசுப்புழு ஆதாரங்களை அழிக்க நகராட்சியில் இருந்து சுமார் 105 கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வீடுகளில் சோதனை செய்யும் பொழுது டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அந்த வீட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். தற்பொழுது நூம்பல் பகுதியில் டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் கொசுப் புழுக்கள் தனியார் தொழிற்சாலை ஒன்றிலும் தனியார் பள்ளி ஒன்றிலும் இருந்தது. ஆகவே டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்ததால் தொழிற்சாலை மற்றும் பள்ளிக்கு ஒரே நாளில் 60000 ரூபாய் அபராதம் விதித்துள்ளோம்” என்று அவர் கூறினார்.