Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தனியார் பள்ளி கட்டணம் வசூலிக்கும் முறையில் மாற்றம்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

இந்தியா முழுவதும் கொரோனா பரவலானது கடுமையாக பாதித்து இருந்தது. இந்த நிலையில், ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டன. மேலும், கொரோனாவின் அச்சம் மக்கள் இடையே வெகுவாக இருந்து வந்தது.

அதனை தொடர்ந்து இரண்டாவது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும்கூட, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக இரண்டாவது அலையானது மெல்லமெல்ல கட்டுப்படுத்தப்பட்டது. இதன் மூலமாக தளர்வுகளற்ற ஊரடங்கு ஆகியன போடப்பட்டன.

மேலும், பள்ளி கல்லூரிகள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டது. இதுவரை திறக்கப்படவில்லை. அதனையடுத்து, தனியார் பள்ளிகள் எவ்வாறு கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும்? என்ற விபரங்களை பள்ளிக் கல்வி துறை ஆணையர் வெளியிட்டுள்ளார்

மேலும், 75 சதவீதம் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், உத்தரவை மீறி சில தனியார் பள்ளிகளில் கட்டணத்தை செலுத்த வேண்டும் என கூறுவதாக புகார்கள் மீண்டும் மீண்டும் எழுந்து வருகின்றன என்றும் கூறுப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தனியார் பள்ளிகள் எவ்வாறு கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்ற விவரங்களை பள்ளி கல்வித் துறை ஆணையர் வெளியிட்டுள்ளார். அதன்படி ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தனியார் பள்ளிகளில் 40% மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் பள்ளிகள் திறக்கப் பட்டதும் 2 மாதங்களுக்குள் 35% கட்டணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து எஞ்சிய 25 சதவீத கட்டணத்தை எப்படி வசூல் செய்வது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை மீறி தனியார் பள்ளிகள் ஏதாவது அதிகமான கட்டணத்தை வசூலித்தால் அதனை குறித்து புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தனியார் பள்ளிகள் இனியாவது மக்களின் பணத்தை உறிஞ்சாமல் இருக்கலாம் என்று மக்கள் கூறுகின்றனர்.

மேலும், இன்று அதிகாலை 11 மணிக்கு பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட் வருவதனைத் தொடர்ந்து, சிபிஎஸ்இ ரிசல்ட் எப்போது வரும் என்று மக்கள் கேட்டு வருகின்றனர். விரைவில் சிபிஎஸ்இக்கும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version