Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பரபரப்பு! அரசு பள்ளி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட தனியார் பள்ளி மாணவன்!

ராய்ச்சூரில் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவர் ஒருவர் அரசு பள்ளி வளாகத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகுர் தாலுகா அன்வரி கிராமத்தில் வசிக்கும் ஒரு தம்பதியினரின் மகன் கங்கண்ணா இந்த சிறுவன் ராய்ச்சூர் மாவட்டம் மாண்வி தாலுக்கா கவிதாலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மல்லதகுட்டே கிராமத்தில் இருக்கின்ற தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.

அதே கிராமத்திலிருக்கின்ற உறவினர் வீட்டில் கங்கண்ணா தங்கி பள்ளிக்குச் சென்று வந்தார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலையில் அவர் வழக்கம்போல பள்ளிக்கு கிளம்பினார்.

ஆனால் அவர் படிக்கும் தனியார் பள்ளிக்கு செல்லாமல் கிராமத்திலிருக்கின்ற அரசு பள்ளிக்கு சென்று அங்கிருக்கின்ற வளாகத்திலிருக்கும் கம்பியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கவிதாலா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Exit mobile version