விஷ்ணுவிஷாலுக்கு ஜோடியாகும் ‘இந்தியன் 2’ பட நடிகை
நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ஒரு திரைப்படம் கூட இந்த ஆண்டு வெளியாகவில்லை என்பதால் அவரது ரசிகர்கள் அதிருப்தியில் இருந்த நிலையில் அடுத்த ஆண்டு அவருடைய மூன்று படங்கள் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜகஜ்ஜால கில்லாடி மற்றும் எப்.ஐ.ஆர் ஆகிய இரண்டு படங்களில் விஷ்ணுவிஷால் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு வெளியான வெற்றிப்படங்களில் ஒன்றான ’சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என்ற படத்தை இயக்கிய செல்லா அப்பாவு மீண்டும் விஷ்ணு விஷால் நடிக்கவிருக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படம் ஒரு ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட அதிரடி ஆக்ஷன் படம் என்றும் இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும் இந்த படத்தில் ப்ரியா பவானிசங்கருக்கு ஆக்சன் காட்சிகள் இருப்பதால் அவர் தற்போது சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கி 2020ஆம் ஆண்டு இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவினர்களிடமிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன சிலுக்குவார்பட்டிசிங்கம் போலவே இந்த படமும் விஷ்ணுவிஷாலுக்கு ஒரு திருப்பத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.