சென்னை வியாசர்பாடியை சார்ந்த ரவிக்குமார் என்பவரின் 17 வயது மகள் பிரியாவின் மரண சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் விலகாமல் இருக்கிறது. தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த பிரியாவின் ஒரே ஆசை இந்தியாவுக்காக கால்பந்து விளையாட வேண்டும் என்பதுதான்.
தவறான சிகிச்சையின் காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அவர் நன்றாக கால்பந்து விளையாடுவார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆகவே அவருடைய மரணம் உண்மையிலேயே தெரியாமல் தவறான சிகிச்சை வழங்கப்பட்டு நிகழ்ந்ததா? அல்லது வேறு யாராவது அவருடைய மரணத்திற்கு மறைமுக காரணமாக இருந்தார்களா? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
அவருடைய வலது கால் முட்டியில் சிறிய அளவில் ஜவ்வு கிழிந்து இருப்பதாக தெரிவித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது ஆனால் சிறிய அளவிலான அறுவை சிகிச்சை என்று தெரிவித்து விட்டு அதன் பின்னர் கால் அழுகிய நிலையில் இருக்கிறது, அதனை அகற்ற வேண்டும் என்று தெரிவித்து பிரியாவின் கால்களை அகற்றினர் மருத்துவர்ள்.
ஆனால் சிறிய பிரச்சனை என்று தெரிவித்து மருத்துவமனையில் சேர்த்து விட்டு அதன் பின்னர் கால் அழுகிய நிலையில் இருக்கிறது. உயிரை காப்பாற்ற வேண்டும் என்றால் கால்களை அகற்ற வேண்டும் என்று தெரிவித்து கால்களை அகற்றிய மருத்துவர்களால் அவர் தற்போது உயிரிழந்துள்ளார்.
இந்த விவகாரம் தான் மேலும் சந்தேகத்தை கிளப்புகிறது. ஒருவேளை அவர் கால்பந்தாட்டத்தில் நன்றாக செயல்படுகிறார் என்பதை புரிந்து கொண்ட எதிர்தரப்பினர் அவர் இருந்தால் தனக்கு வேண்டப்பட்ட யாரோ ஒருவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று நினைத்திருக்கலாம்.
ஆகவே மருத்துவர்கள் மூலமாக அவருடைய கால்களை அகற்றி செய்து விட்டால் அவர் மீண்டும் இந்த விளையாட்டில் ஈடுபட முடியாது என்று நினைத்திருக்கலாம். அப்படி நடந்திருந்தால் அது மிகப் பெரிய துரோகம் ஆகும்.
ஆனால் கால்களை அகற்றிய பின்னர் அவருடைய உயிருக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை என்று நினைத்திருந்த நிலையில் அவர் திடீரென்று உயிரிழந்தது ஒட்டுமொத்த நபர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கால்களை அகற்றிய பின்னர் மருத்துவர்கள் தவறான முறையில் கட்டுப்பட்டதால் அந்த கட்டின் காரணமாக ரத்த ஓட்டம் நின்று விட்டபடியால் அவர் உடலில் அடுத்தடுத்து சிறுநீரகம், இதயம் என்று பல உறுப்புகள் செயலிழக்க தொடங்கி மெல்ல, மெல்ல, அவர் உயிரிழந்து விட்டார்.
ஆனால் இது உண்மையிலேயே மருத்துவர்கள் கவனக்குறைவு காரணமாக நடைபெற்றதா அல்லது மருத்துவர்கள் இதனை திட்டமிட்டு செய்தார்களா என்பது இதுவரையில் கேள்விக்குறியாகவே இருக்கிறது ஆனால் மாணவி பிரியாவிற்கு சிகிச்சை வழங்கிய இரு மருத்துவர்களை மருத்துவமனை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது. மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், மருத்துவமனையில் மாணவி பிரியாவின் குடும்பத்தினர் சிறிய அளவில் ஜவ்வு கிழிந்ததாக தெரிவித்தார்கள். சனிக்கிழமை மருத்துவமனையில் சேர்த்தோம். திங்கள்கிழமை அறுவை சிகிச்சை என்று தெரிவித்தார்கள். தவறான அறுவை சிகிச்சை செய்து விட்டார்களே, குழந்தை வலியால் துடித்துக் கொண்டே இருந்தால், அவள் அழும் போதெல்லாம் ஊசியை போட்டார்கள். யாரும் அரசியல் பேசாதீர்கள். உயிரே போய்விட்டது என்று பிரியாவின் குடும்பத்தினர் தலையில் அடித்துக் கொண்டு அழுதனர்.
பிரியாவின் சடலத்தை பார்த்த தோழிகளோ ஐயோ கண்ணத்திறந்து பாருடி பிரியா, எங்களை விட்டுட்டு போகாதே என்று கதறி அழுதனர். அதைவிட கொடுமை இறுதிச் சடங்கின் போது ஒரு மாணவி அங்கேயே மயங்கி விழுந்தார்.
ஐசியூவில் இருந்த போதும் கூட தன்னை காண்பதற்கு தோழிகள் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள் என்பது தெரிந்து தன்னுடைய தாயிடம் பிரியா கடைசி சமயத்திலும், அம்மா அவங்களை எல்லாம் சாப்பிட வச்சு அனுப்புமா. பசியா அனுப்பிடாதே என்று தெரிவித்துக் கொண்டே இருந்தாராம் மாணவி பிரியா.
இறுதி அஞ்சலி என்பது பிரியாவின் சடலத்தின் மீது அவர் விளையாட்டில் இதுவரையில் வாங்கிய மெடல்களையும், விருதுகளையும் ஒவ்வொன்றாக எடுத்து அடுக்கி வைத்து பெற்றோர்களும், உறவினர்களும் கதறி அழுதனர். இத்தனை கப் எதுக்குடா வாங்குனே, ஏன்டா நாங்கள் கூப்பிடுறது காதுல விழலயா என்று அழுது கேட்டு கண்ணீர் வடித்தனர் குடும்பத்தினரும் பெற்றோர்களும்.
பிரியாவின் கல்லூரி தோழிகள் பிரியாவுக்கு பிடித்த கால்பந்தை கொண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்திய அழுது காட்சி காண்பவர்கள் இதயத்தை ஒரு நொடி நிற்க வைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
மாணவி பிரியாவின் உடல் ஷெனாய் நகர் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவருடைய இறுதி ஊர்வலத்தின் போது அவருடைய கால்பந்து, காலணிகளும் விருப்பப்பட்டு வாங்கிய ஜெர்சியும் வைத்துக் கொண்டு வரப்பட்டது. பிரியாவின் இறுதிச்சடங்கில் உறவினர்கள், நண்பர்கள் என்று பலரும் பங்கேற்றுக் கொண்டனர்.
அடக்கம் செய்து மண்ணை போட்டு மூடி விட்ட பின்னரும் பிரியாவின் பெற்றோர்களும், உறவினர்களும் அவரை கூப்பிட்டபடியே கதறி அழுது கொண்டே இருந்தார்கள். இந்த நிலையில், பிரியாவின் கடைசி வீடியோ ஒன்றை அவருடைய நண்பர்கள் பகிர்ந்து வருகிறார்கள். கால்பந்து பயிற்சிக்கு நடுவில் தன்னுடைய தோழியுடன் பெரியார் நடனம் ஆடுகிறார். மகிழ்ச்சியாகவும், உற்சாகத்துடன் தோழியை இறுகப் பிடித்துக் கொண்டு பிரியா வளைந்து, நெளிந்து துடிப்புடன் சிரித்தபடியே நடனம் ஆடுகிறார். இதுதான் பிரியாவின் கடைசி வீடியோவாம். கடைசி நடனமும் இதுதான் என்று சொல்லப்படுகிறது.
அதேபோல பிரியாவுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு முந்தைய நாள் தன்னுடைய அண்ணனுடன் தொலைபேசியில் பேசி இருக்கிறார் பிரியா. அப்போது அண்ணா எனக்கு ஒண்ணுமே ஆகல நீ ஏன் பயப்படுற என்று கேட்டுள்ளார். உன் பிறந்தநாளுக்கு என்ன வேண்டும் என்று அண்ணன் கேட்டதற்கு பூட்ஸ் மட்டும் வாங்கி கொடு என்று தெரிவித்தாராம்.
இதுதான் கடைசியாக ஆசைப்பட்டு பிரியா கேட்டது என்று தெரிவிக்கிறார்கள். பிரியா எப்போதுமே சுறுசுறுப்புடன் இருப்பாராம். பிரியா அழுது நாங்கள் பார்க்கவே இல்லை எப்போதுமே சிரித்துக் கொண்டே இருப்பாள் என்று பிரியாவின் தோழிகள் தெரிவிக்கிறார்கள். அந்த விதத்தில் இந்த வீடியோவிலும் துள்ளி, குதித்து ஆடும் பிரியா சிரித்துக்கொண்டே இருக்கிறார்.