Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் மீண்டும் என்ட்ரி கொடுத்த பிரியங்கா! யாருடன் புகைப்படம் எடுத்து இருக்கிறார் தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 5 தில் 106நாட்களை கடந்து இறுதி போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தவர் தொகுப்பாளர் பிரியங்கா.

பிக்பாஸ் 5வது சீசனில் பங்கு பெற்ற இவர் அந்த நிகழ்ச்சி முடிவடைந்ததைத் தொடர்ந்து எப்போது இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வருவார் என்று ரசிகர்கள் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த சூழ்நிலையில், திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்று மறுபடியும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார் தொகுப்பாளர் பிரியங்கா.

சூப்பர் சிங்கர் ஜூனியர் படப்பிடிப்பிலிருந்து பின்னணி பாடகி பிரியங்கா மற்றும் தொகுப்பாளினி பிரியங்கா உள்ளிட்ட இருவரும் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியிருக்கிறது. மேலும் அடுத்த வாரம் ஒளிபரப்பாக இருக்கின்ற சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை மாகாபா மற்றும் பிரியங்கா உள்ளிட்ட இருவரும் இணைந்து தொகுத்து வழங்குவார்கள் என்று சொல்லப்பட்டு வருகிறது.

Exit mobile version