Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பங்களாவை காலி செய்தார் பிரியங்கா காந்தி

சிறப்பு பாதுகாப்பு படையின் பரிந்துரைப்படி, 1997ல் பிரியங்காவுக்கு, டெல்லியில், லோதி எஸ்டேட் பங்களா ஒதுக்கப்பட்டது. இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கபட்டவர்களுக்கு எஸ்பிஜி பாதுகாப்புக்கான இடத்தில் தங்க அனுமதிக்க இயலாது. எனவே ஜூலை 31க்குள் பங்களாவை காலி செய்யுமாறும், வாடகை நிலுவை, ரூ.3.26 லட்சத்தை செலுத்துமாறும், மத்திய உள்துறை அமைச்சகம், பிரியங்காவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

பிரியங்கா காந்தி டெல்லியில் உள்ள லோதி எஸ்டேட் பங்களாவை  காலி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியின் சுஜன் சிங் பூங்கா அருகில் உள்ள வீடு ஒன்று அவருக்கு பிடித்துள்ளது. தற்போது, அங்கு சில மராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. அது ஓரிரு மாதங்களில் நிறைவு பெறும். அதன்பிறகு பிரியங்கா, அந்த வீட்டில் குடியேறுவார். அதுவரை  சிறிது காலம் அரியானா மாநிலம் குருகிராமில், செக்டார் 42 ல் டிஎல்எப் அராலியாவில் உள்ள வீட்டில் தங்கியிருப்பார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version