1 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதில் சிக்கல்!
கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக பெருமளவு பாதித்து வருகிறது.இந்நிலையில் முதல் அலை மற்றும் இரண்டாம் அலைகலில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.இதனிடையே சிறிது காலம் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டது ,அப்பொழுது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொற்றின் பாதிப்பு அதிகமாக பரவியது.தற்பொழுது தடுப்பூசி நடைமுறையில் கொண்டு வரப்பட்டுள்ளது.அதனால் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசியை செலுத்தி கொண்டனர்.அவ்வாறு தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு மட்டுமே வேலை என்பதுபோல் ஆகிவிட்டது.
தங்களிடமிருந்து மாணவர்களுக்கு தொற்று பரவாமல் இருக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டது.அதனையடுத்து ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இவர்கள் சுழற்சிமுறையில் பள்ளிக்கு சென்று பாடங்கள் பயின்று வருகின்றனர்.கல்லூரிகளிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் தொற்றுக் ஏற்றார்போல் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது.ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட வில்லை.
அது குறித்து ஆலோசனையானது பல கட்டங்களாக நடைபெற்றது.நேற்று மாலை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.அதனால் வரும் நவம்பர் மாதம் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்படும் என்றனர். பலர் இதனை எதிர்த்து, முதலில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கலாம் என்றும் ,அவர்கள் நிலையைக் கண்டு அதன் பிறகு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கலாம் என்றும் தங்களது கோரிக்கையை கூறி வருகின்றனர்.
அந்த வகையில் தனியார் பள்ளி கூட்டமைப்பு செயலாளர் நந்தகுமார் ,தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது, ஆறு முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முதலில் பள்ளிகள் திறக்க வேண்டும். அதனையடுத்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க வேண்டும்.ஏனென்றால் மாணவர்கள் மிகவும் மன உளைச்சலில் உள்ளனர்.அதனால் ஒரு கட்டமாக அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்படாமல் இவ்வாறு பிரித்து திறக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.