பாகிஸ்தானிலும் தடை செய்ய இருக்கும் செயலிகள்

0
123

‘ஒழுக்கமற்றவை’ என்று வகைப்படுத்தியுள்ள ஐந்து செயலிகளைப் பாகிஸ்தான் தடைசெய்துள்ளது. Tinder, Grindr, SayHi, Tagged, Skout போன்ற சமூக ஊடகத் தளங்கள் பாகிஸ்தானியச் சட்டத்திற்கு உகந்தவகையில் தளங்களை நிர்வகிக்கத் தவறியதாய்க் கூறப்பட்டது. ஆனால் பெரியவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப அந்தச் செயலிகளைப் பயன்படுத்த விரும்பினால், அவற்றுக்கு அரசாங்கம் தடைவிதிப்பதற்கு உரிமை இல்லை என்று மின்னிலக்க உரிமைக்குழு குரல் எழுப்பியுள்ளது.

செயலிகளைத் தடைசெய்தாலும் அவற்றைப் பயன்படுத்த மக்கள் மாற்றுவழிகளைக் கண்டறிவர் என்றார் Bytes For All உரிமை அமைப்பின் இயக்குநர். செயலிகள் ‘ஒழுக்கமற்ற’ தகவலை அகற்றுவதாகக் காட்டினால் தடைகள் நீக்கப்படும் என்றது அரசாங்கம். ஆனால் ‘ஒழுக்கமற்ற தகவல்’ என்பது என்ன என்று அது விளக்கவில்லை. ஜூலை மாதத்தில் ஆபாசக் காணொளிகளை அகற்றுமாறு TikTok செயலிக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.