Actor Vijay : நடிகர் விஜய் திரைத்துறைக்கு குட் பை சொல்லிவிட்டு அரசிலுக்கு என்ட்ரி கொடுத்ததிலிருந்தே அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணமேயிருந்தது. அந்த வகையில் அவரது ரசிகர்கள் மற்றுமின்றி மாற்று கட்சியை சேர்ந்தவர்களும் அவருடைய தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நடத்தப்படும் முதல் மாநாட்டுக்காக காத்திருந்தனர்.
அந்த வகையில் கடந்த 27 ஆம் தேதி விக்ரவாண்டியில் மாநாடு நடத்தி முடிக்கப்பட்டது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் யாரும் எதிர்பார்க்காத வகையில் மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆளும் இரு கட்சிகளையும் சரமாரியாக விமர்சித்து பேசினார். குறிப்பாக அவங்க பாசிசம் என்றால் நீங்க என்ன பாயாசமா என திமுக தரப்பை கேள்வி கேட்டது அவர்களிடம் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.
அந்த வகையில் இவரின் பேச்சுக்கு திமுக தரப்பில் பல்வேறு நபர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் இவரின் விமர்சனத்துக்கு ஆளான மத்தியில் ஆளும் பாஜக தரப்பில் பெரிதாக விமர்சனம் செய்யாமல் மௌனம் காத்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய படத்தில் நடித்ததற்கு எப்படி சம்பளம் வாங்கினார் என்று திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் முன்பு எப்போதோ பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தலைவா திரைப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார்.
அவரது தந்தை ஏ.எல்.அழகப்பன் இப்படத்தை தயாரித்திருந்தார். இப்படம் வெளியான போது தமிழகத்தில் ஆளும் கட்சியாக அதிமுக இருந்த நிலையில் கடும் எதிர்ப்பை சந்தித்தது. அந்த வகையில் மற்ற மொழிகளில் வெளியான பின்னரே தமிழில் வெளியாகும் சூழலுக்கு இப்படம் தள்ளப்பட்டது.
அப்போது ஏ.எல்.அழகப்பன் அளித்த பேட்டியில் நான் நடிகர் விஜய்க்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தேன் என தெரியுமா? உச்ச நட்சத்திரங்களுக்கு சம்பளத்தில் பாதியை தான் செக்காக கொடுப்போம். அவர்கள் சம்பளத்தில் 30 சதவீதம் வருமான வரி கட்ட வேண்டும். இது வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தெரியும் என்று பேசியிருந்தார். நாங்களும் அப்படிதான் வாங்குவோம், அப்படிதான் கொடுப்போம் என பேசியிருந்தார்.
மாநாட்டில் பேசிய விஜய் ஊழலை ஒழிப்பது குறித்து பேசியிருந்த நிலையில் திமுக தரப்பை சேர்ந்த பலர் இந்த வீடியோவை பகிர்ந்து விஜய் ஊழலை பற்றி பேசலாமா? என விமர்சித்து வருகின்றனர். ஆனால் மாஸ்டர் படத்தின் போது விஜய் வீட்டிற்கு வருமான வரித்துறையினர் சோதனையிட சென்ற போது அவரது சம்பளம் 100 கோடி என வெளிப்படையாக கணக்கு காட்டப்பட்டிருந்தது. மேலும் வருமான வரித்துறை அதிகாரிகள் கருப்பு பணம் எதையும் அங்கு கைப்பற்றியதாக தெரிவிக்கவில்லை என விஜய் ரசிகர்கள் இதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.