தயாரிப்பாளரா?ரசிகர்களா?தளபதி விஜய்க்கு நெருக்கடி!

0
147

பாலிவுட் திரையுலகில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய படங்களான அக்‌ஷய் குமாரின் லக்‌ஷ்மி பாம், சூர்யவன்ஷி, ரன்வீர் சிங்கின் ‘83′, ஆலியா பட்டின் சடக் 2, அஜய் தேவ்கனின் ‘புஜ்’, உள்ளிட்ட ஏகப்பட்ட படங்கள் நேரடியாக OTTல் ரிலீஸ் செய்ய முடிவு செய்து உள்ள நிலையில். தமிழிலும் இதுவரை பொன்மகள் வந்தாள், பெண்குயின் உள்ளிட்ட படங்கள் ஆன்லைனில் நேரடியாக ரிலீஸ் ஆகியுள்ளன.

நடிகர் சூர்யாவின் “சூரரைப் போற்று” படமும் “மாஸ்டர்” படமும் தியேட்டரில் ஒன்றாக ரிலீஸ் ஆகி பயங்கர கிளாஷ் ஆகும் என்ற எதிர்பார்ப்புகள் தற்போது தகர்ந்துள்ளன.

ஒரு தயாரிப்பாளராக சூர்யா இந்த முடிவை எடுத்துள்ளார். மாஸ்டர் பட தயாரிப்பாளரை மனதில் வைத்து நடிகர் விஜய் இதே முடிவை எடுப்பாரா? இல்லை ரசிகர்களுக்காக அடுத்த ஆண்டு வரை காத்திருப்பாரா? என்ற கேள்வியும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தி விழாவுக்கே கூட்டம் கூடக் கூடாது என்பதற்காக, வீட்டிலேயே விநாயகரை வழிபட சொல்லி உள்ள தமிழக அரசு, நிச்சயம் தீபாவளிக்கு தியேட்டர்களை திறந்து விட்டால், மக்கள் கூட்டத்தை, அதுவும் தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் வந்தால், கட்டுப்படுத்தவே முடியாது என்பதை நன்கு உணர்ந்திருக்கும். அதனால், இந்த ஆண்டு இறுதி வரை தியேட்டர்கள் திறக்கப்பட வாய்ப்பில்லை என்றே நிபுணர்கள் கருதுகின்றனர்.

இதனை நன்கு உணர்ந்து கொண்ட நடிகர் சூர்யா, தனது தயாரிப்பில் உருவான சூரரைப் போற்று படத்தை வரும் அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரைமில் வெளியிட முடிவு செய்துள்ளார். இதன் மூலமாக, நவம்பர் 14ம் தேதி தீபாவளி பண்டிகை வரை தியேட்டர்கள் திறக்காது என்பதை அவர் கணித்துள்ளது புரிகிறது.

தயாரிப்பாளராக சூர்யா சிந்தித்து எடுத்த இந்த அதிரடி முடிவை எடுத்துள்ள நிலையில், முழுதும் தயாரான பல படங்களை தமிழ்நாட்டில் ஆன்லைனில் நேரடியாக ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முன் வருவார்கள் என்பது நிச்சயம். கோடிக்கணக்கில் கடன் பட்டு படம் எடுத்த அவர்களுக்கு வட்டி எகிறிக் கொண்டே போவது தான் பெரிய கவலையாகவும் சுமையாகவும் உள்ளது.

இந்நிலையில், தளபதி விஜய் என்ன முடிவை எடுக்கப் போகிறார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவை கருத்தில் கொண்டு OTT தளத்தில் இந்த ஆண்டுக்குள் படத்தை ரிலீஸ் செய்வாரா? அல்லது தனது ரசிகர்கள் பலம் மற்றும் தியேட்டர் ஓனர்களின் நலம் கருதி அடுத்த ஆண்டு பொங்கல் வரை வெயிட் செய்வாரா? என்பதை அறிந்து கொள்ள ஒட்டுமொத்த கோலிவுட்டே காத்திருக்கிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுக்குள் வந்தால் தான் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தியேட்டர்கள் திருவிழாக் கோலம் காணும். வெளிநாடுகளில், லாக்டவுன் காரணமாக தியேட்டர்கள் திறக்கப்பட்டு இருந்தாலும், 200 சீட்டுக்கு வெறும் 4 பேர் வரும் அவல நிலைகளும் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சீக்கிரமே இந்த கொரோனா பிரச்சனை ஒழிவதே எல்லோருக்கும்