சர்வதேச அளவில்போர் தளவாடங்களை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் சவுதி அரேபியாவை அடுத்து இந்தியா இரண்டாம் இடத்தில் வகிக்கிறது.
இத்தகைய சூழலில் “ சுயசார்பு இந்தியா” திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிமுகப்படுத்தினார். அனைத்து துறைகளிலும் நாட்டை சுயசார்பு அடைய செய்வதே இலக்கு என்று அவர் அறிவித்தார்.
இந்நிலையில் போர்க்கருவிகள் உள்ளிட்ட 101 தளவாடங்களின் இறக்குமதி படிப்படியாக நிறுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே கடும் பாதிப்பை சந்தித்து இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்த இறக்குமதி குறைப்பு அறிவிப்பு நிம்மதியைத் தந்துள்ளது.
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகள் வெறும் அறிக்கை ஆகவே இருப்பதை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேபோல் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தித் திட்டங்களும் காகிதத்தில் மட்டும் இடம் பெறாமல் நடைமுறைக்கு வரவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
விண்வெளித்துறையில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றில் சவாலாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ செயல்பாடு உள்ளது.
அதேபோன்று இத்தகைய பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறையிலும் எந்தவித காலதாமதமின்றி அமல்படுத்தும் போது அத்தகைய துறையிலும் உலக நாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் இந்தியா கால்பதிக்கும் என்பதற்கு எந்தவித ஐயமும் இல்லை.
பாதுகாப்பு தளவாடங்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணி வகிக்க போகும் காலம் வெகு தொலைவில் இல்லை!