தல தளபதி படங்களை வெளியிட தடை! உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

0
305
Prohibited to publish pictures of Thala Thalapathy! Action order issued by the High Court!

தல தளபதி படங்களை வெளியிட தடை! உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் நடிகர் அஜித்.இவர் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.இவர் நடப்பில் தற்போது தாயராகி உள்ள படம் தான் துணிவு.இந்த படத்தின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் இந்த படத்தின் இயக்குனர் வினோத் தயாரிப்பாளர் போனி கபூர் இவர்கள் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த துணிவு திரைப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் டிரெய்லர் அண்மையில் தான் வெளியானது.மேலும் இந்த படம் நாளை திரையில் வரவுள்ளது.அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துக்கு இணையாக ரசிகர்களை பட்டாளைத்தை சேர்த்தவர் என்றால் அது நடிகர் விஜய் தான்.

இவர் தமிழ் சினிமாவில் எண்ணற்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.இவர் நடிப்பில் தற்போது திரையில் வரவுள்ள திரைப்படம்  வாரிசு.இந்த படமும் நாளை வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்நிலையில் இரண்டு படங்களின் தயாரிப்பு நிறுவனங்களும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.

அந்த மனுவில் அதிக பொருட் செலவில் தயாரான இரண்டு படங்களையும் சட்டவிரோதமாக வெளியிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும் என கூறப்பட்டிருந்தது.அதனையடுத்து  உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அந்த உத்தரவில் வாரிசு திரைப்படத்தை வெளியிட 4,584 இணையதளங்கள்,துணிவு படத்தை வெளியிட 2754 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.