சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பை முன்னிட்டு, திறக்கப்பட்டு மண்டல பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, ஐப்பசி மாத பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அதன்படி முதல் வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம் உட்பட பூஜைகள் வரும் 21ம் தேதி வரை 5 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 15000 பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளிக்கப்பட இருந்தது. இதனிடையே கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. அதனால்,பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் பம்பை ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கேரளாவில் 19ஆம் தேதி வரை கன மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், 19ம் தேதி வரை சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கேரளா முதல்வர் பினராய் விஜயன் அறிவித்துள்ளார்.