Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அடுத்த ஒன்பது நாட்களுக்கும் 144 தடை உத்தரவு அமல்! போலீசார் தீவிர கண்காணிப்பு!

அடுத்த ஒன்பது நாட்களுக்கும் 144 தடை உத்தரவு அமல்! போலீசார் தீவிர கண்காணிப்பு!

 

மருது சகோதரர்களின் நினைவு தினம் தொடர்ந்து வரும் 27ஆம் தேதி காளையார் கோவிலில் சமுதாய மக்கள் சார்பில் குருபூஜை விழாவுக்கு அனுசரிக்கப்பட உள்ளது அதை தொடர்ந்து பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவும் நடைபெற உள்ளது இந்நிகழ்விற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் சமுதாய மக்கள் ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம் அதனை முன்னிட்டு அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில் மருது சகோதரர்களின் நினைவு தினம் மற்றும் தேவர் செய்தியை முன்னிட்டு இன்று முதல் ஒன்பது நாட்களுக்கு சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர்உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த தடையை மீறுபவர்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version