அண்ணா பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் சூப்பர் வேலை வாய்ப்பு! படித்த இளைஞர்களே விண்ணப்பிக்க தயாரா?

0
182

அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் துறையில் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தில் centre for change and disaster management தொடங்கியுள்ள புதிய திட்டத்தில் வேலை செய்ய ஆட்கள் தேவைப்படுகிறார்கள் அந்த பணிக்காக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது விண்ணப்பம் செய்வதற்கு இன்னும் 3 நாட்களே இருக்கிறது. பணியின் முழு விவரத்தை இங்கே நாம் தெரிந்து கொள்ளலாம்.

பணியின் விவரங்கள்

பணியின் பெயர் காலியாகவுள்ள இடங்கள் சம்பளம்
Project Scientist 3 ரூ.60,000/-
Project Associate II 2 ரூ.50,000/-
Project Assistant 1 ரூ.15,000/-

பணியின் பெயர் பிரிவு
Project Scientist Coastal Ecosystem, Urban Habitat, Geospatial Technology.
Project Associate II Urban Habitat, Geospatial Technology.
பல்கலைக்கழக பணிக்கான கல்வித் தகுதி:

Project Scientist சம்பந்தப்பட்ட துறையில் Ph.D or M.E/M.Tech/M.Sc
Project Associate II சம்பந்தப்பட்ட துறையில் M.E/ M.Tech/M.Sc
Project Assistant B.Com/BCA

விண்ணப்பிக்கும் முறை

ஆர்வம் உள்ளவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொண்டு பூர்த்தி செய்து தபால் மூலமாக அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் விண்ணப்பத்துடன் சான்றிதழ்களின் தகவல்கள் மற்றும் தேவையான நகல்களுடன் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கும் முறை

தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

The director centre for climate change and disaster management Anna university chennai

விண்ணப்பிக்க கடைசி நாள் 5-11 – 2022