இஸ்ரேலில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்கும் திட்டம்!!! ஆபரேஷன் அஜய் தொடங்கப்பட்டு உள்ளதாக வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு!!!

0
136
#image_title

இஸ்ரேலில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்கும் திட்டம்!!! ஆபரேஷன் அஜய் தொடங்கப்பட்டு உள்ளதாக வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு!!!

இஸ்ரேல் நாட்டில் மாட்டிக் கொண்டிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணி தற்பொழுது தொடங்கியுள்ளது. ஆபரேஷன் அஜய் என்ற பெயரில் இந்தியர்களை மீட்கும் பணியை அரசு மேற்கொண்டுள்ளதாக வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் அவர்கள் அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த சனிக்கிழமை அதாவது அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு திடீரென்று ஆயிரக்கணக்கான ஏவுகனைகளை செலுத்தி தாக்குதல் நடத்தியது. மேலும் எல்லைப் பகுதியிலும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு பெரும் தாக்குதலை நடத்தியது.

இதில் பெண்கள், முதியவர்கள் என்று நூற்றுக் கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு படையும் பதிலடி கொடுத்து வருகின்றது.

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு காசா பகுதியில் உள்ள கட்டிடங்களை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றது. இதுவரை இஸ்ரேல் நாட்டில் 900 பேரும், பாலஸ்தீனிய நாட்டில் 770 பேரும் படுகாயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டுக்கு அமெரிக்காவும் இங்கிலாந்தும் ஆதரவு தெரிவித்து வருகின்றது.

இதையடுத்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அவர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேர் நிலவரம் குறித்து தகவல்களை கூறினார். மேலும் போர் நடக்கும் இஸ்ரேலில் தங்கி இருக்கும் 18000 இந்தியர்களை மீட்கும் பணியில் தற்பொழுது நாடு துரிதமாக செயல்பட்டு வருகின்றது.

அந்த வகையில் வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் அவர்கள் ஆபரேஷன் அஜய் என்ற பெயரில் இஸ்ரேலில் தங்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகள் செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளார்.

இது குளித்து எக்ஸ் தளத்தில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அவர்கள் “இஸ்ரேல் நாட்டில் இருக்கும் இந்தியர்கள் பத்திரமாக இந்தியா திரும்ப ஆபரேஷன் அஜய் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க சிறப்பு விமானங்களும் பிற ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கின்றது. வெளிநாட்டில் இருக்கும் எங்கள் நாட்டினரின் பாதுகாப்புக்கும் நலவாழ்வுக்கும் முழுமையாக அர்பணிப்புடன் காத்துக்கொண்டிருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

இதற்கு மத்தியில் இஸ்ரேலில் இருந்து இந்தியா செல்வதற்காக முன்பதிவு செய்து காத்துக் கொண்டிருக்கும் இந்தியர்கள் அனைவரும் நாளை(அக்டோபர்13) சிறப்பு விமானம் மூலமாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று இஸ்ரேல் நாட்டில் உள்ள தூதரகம் அறிவித்துள்ளது.