நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாட்டாளி மக்கள் கட்சி முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! நடுநடுங்கிய ஆளும் தரப்பு!

0
125

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக போட்டியிடும் 208 வேட்பாளர்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜிகே மணி நேற்று வெளியிட்டிருக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக சென்னை, செங்கல்பட்டு, சேலம், காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பட்டியலை அந்தக் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே. மணி தியாகராயநகரில் இருக்கின்ற கட்சி அலுவலகத்தில் நேற்று வெளியிட்டிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய இணையமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு இணை பொதுச் செயலாளருமான ஏ.கே மூர்த்தி, ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட செயலாளர்கள் 8 பேர் மற்றும் பகுதி வட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.

இதனைத் தொடர்ந்து மத்திய சென்னை மேற்கு மாவட்டம் 13 வார்டுகள் மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் 13 வார்டுகளுக்கான தென்சென்னை தெற்கு மாவட்டம் 15 வார்டுகள், தென்சென்னை மேற்கு மாவட்டம் 12 வார்டுகள், தென் சென்னை கிழக்கு மாவட்டம் 12 வார்டுகள், வட சென்னை மேற்கு மாவட்டம் 13 வார்டுகள், வட சென்னை மத்திய மாவட்டம் 12 வார்டுகள், சென்னையில் போட்டியிடும் 90 வார்டுகளுக்கான வேட்பாளர்கள், திருவள்ளூர் மத்திய தெற்கு மாவட்டம் 28 வார்டுகளுக்கான வேட்பாளர்கள், செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் 19 வார்டுகளுக்கான வேட்பாளர்கள், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் 11 வேட்பாளர்கள், சேலம் மாவட்டத்தில் 60 வார்டுகளுக்கான வேட்பாளர்கள் என்று முதல்கட்டமாக 208 வார்டுகளுக்கான் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அதன்பிறகு பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜிகே மணி பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, சென்னையில் 200 வார்டுகளுக்கும், சேலத்தில் இருக்கின்ற 60 வார்டுகளுக்குமான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கின்றோம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நம்பிக்கை ஊட்டுகின்ற தேர்தலாகவும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு திருப்புமுனையாகவும், அமையக்கூடிய தேர்தலாக இருக்கும். நிச்சயமாக மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நடைபெறவிருக்கும் தேர்தலில் பல புதுமுகங்கள், வழக்கறிஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த தேர்தலைப் பொறுத்தவரையில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்திருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் ஒரு வலிமையான கட்சியாக இருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரையில் எந்த ஆட்சியாக இருந்தாலும் பொது மக்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.