புரோமோவுக்கு புரோமோ ரெடி! ஜெயிலர் படத்தின் முதல் பாடலுக்கான புரோமோ இன்று மாலை வெளியாகும் என்று அறிவிப்பு!!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் முதல் பாடலுக்கான புரோமோ இன்று மாலை வெளியாகும் என்று சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். ஜெயிலர் திரைப்படத்தில் பிரபல நடிகர்கள் சிவராஜ்குமார், சுனில், ஜேக்கி ஷெரூப், மோகன்லால், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன், ரம்யா கிருஷ்ணன், தமன்னா மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
ஜெயிலர் திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் திரைப்படத்தை தயாரித்துள்ளது. இதையடுத்து சன்.பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள ஜெயிலர் படத்தின் முதல் பாடலுக்கின அறிவிப்பில் அறிவிப்பில் “முதல் பாடல் ரெடி. முதல் பாடலுக்கான அனவுன்ஸ்மென்ட் புரோமோவும் ரெடி. புரோமோக்கு புரோமோ வீடியோவும் ரெடி. முதல் பாடலுக்கான புரோமோ வீடியோ நாளை(ஜூலை3) மாலை 6 மணிக்கு வெளியாகும்” என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.