அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வா? நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!!

0
218
#image_title

அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வா? நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!!

அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று நீதி மன்றம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.தொடக்கக் காலத்தில் அரசு துறைகளில் இட ஒதுக்கீடு மற்றும் பணி மூப்பு அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டது.

பிறகு ஜாதியை அடிப்படையாகக் கொண்டு பதவி உயர்வு வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது ஜாதியை அடிப்படையாகக் கொண்டு பதவி உயர்வு வந்ததால் தகுதிகள் இருந்தும் பல ஊழியர்கள் உரிய பதவி உயர்வு கிடைக்காமல் இன்றும் இருக்கின்றனர்.

இதனை எதிர்த்து 2004 ம் ஆண்டு பதவி உயர்வு வேண்டும் என்று அரசு ஊழியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதற்கு முன்பாக அரசு ஊழியர்களுக்கு எதிராக வழக்கு இருந்தால் பதவி உயர்வு தர முடியாது என்று ஒரு தீர்ப்பை சென்னை உயர்நீதி மன்றம் வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து தற்போது, ஜாதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது சட்டத்திற்கு புறம்பானது என்றும், அரசு தேர்வாணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும் உயர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் சீனியாரிட்டி அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும், ரோஸ்டர் சிஸ்டத்தில் பதவி உயர்வு பெற்ற 5 லட்சம் அரசு ஊழியர்கள் பதவி இறங்கும் நிலையும் ஏற்ப்பட்டுள்ளது.