உச்சரிப்பு பிழையால் TamilNadu என்ற சொல்லில் ஏற்படப்போகும் மாற்றம்!! உச்சநீதிமன்றத்தின் உத்தரவு!!

0
62
Pronunciation error will change the word TamilNadu!! Supreme Court order!!

தமிழில் தமிழ்நாடு என உச்சரிக்கும் பொழுது உச்சரிப்பு சரியாக உள்ள நிலையில், ஆங்கிலத்தில் TamilNadu என்பது டமில் நாடு என உச்சரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆங்கில வார்த்தையில் தமிழ்நாடு என்ற பெயரில் ழ வரும் வகையில் அரசாணையில் மாற்றம் செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை விரைவில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனுவினை உச்ச நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தவர் தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்த செல்வக்குமார் ஆவார். இவர் இந்த மனுவில் கூறியிருப்பதாவது :-

தமிழ் மொழியின் சிறப்புமிக்க எழுத்தாக ழ எனும் எழுத்து உள்ளது. ஆனால் அரசாணைகளில் STATE GOVERNMENT OF TAMILNADU என குறிப்பிடப்பட்டு வருகிறது.

இதனை பலர் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக டமில்நடு என உச்சரிக்க வழி வகை செய்யும். தமிழ் தெரியாதோருக்கு எழுத்துகளின் உச்சரிப்புதான் உதவும். அந்த வகையில் நம் மாநிலத்தின் பெயரை அவர்கள் தவறாக உச்சரிக்க வாய்ப்புகள் உள்ளன என்று அவர் தன்னுடைய மனுவில் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர் மனுவில் தெரிவித்து இருப்பது, இதே ZHA என்ற ஆங்கில எழுத்தை பயன்படுத்தினால் பிறர் ழ என்ற உச்சரிப்புடன் படிப்பார்கள். எனவே சிறப்பு ழ இடம் பெறும் வகையில் THAMIZHL NAADU அல்லது TAHMIZHL NAADU என திருத்தம் செய்யக் கோரி கடந்த 2021 ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தேன்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் எனது கோரிக்கை தொடர்பாக 8 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இருப்பினும் இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தமிழக அரசின் அரசாணை மற்றும் சுற்றறிக்கைகளில் ஆங்கிலத்தில் ‘THAMIZHL NAADU’ அல்லது ‘TAHMIZHL NAADU’ எனத் திருத்தம் செய்யவும், சேர, சோழ, பாண்டியர்களின் சின்னங்களை உள்ளடக்கி தமிழ்நாட்டிற்கான தனிக் கொடியை வடிவமைத்து பயன்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் தற்பொழுது போட்டுள்ள மனுவானது, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் மனுவை விரைவாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.