Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் நாடாளுமன்றத்தில் பரப்பரப்பு!!”இந்தியா” கூட்டணி கட்சிகள் கருப்பு உடையில் வந்து எதிர்ப்பு!! 

Propaganda again in the Parliament!! "India" coalition parties come in black clothes and protest!!

Propaganda again in the Parliament!! "India" coalition parties come in black clothes and protest!!

மீண்டும் நாடாளுமன்றத்தில் பரப்பரப்பு!!”இந்தியா” கூட்டணி கட்சிகள் கருப்பு உடையில் வந்து எதிர்ப்பு!!

ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்  தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது.  ஏற்கனவே எதிர்கட்சிகள் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர முடிவு செய்திருந்தார்கள்.

இந்த நிலையில் மக்களவை  கேள்வி நேரம் வழக்கம் போல் செயல் படும் என்று சபாநாயர் ஓம் பிர்லா தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து 5 வது நாளாக எதிர்க்கட்சிகள் பிரதமரை பேச கூறி அதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டது. அதனையடுத்து மணிப்பூர் விவகாரம் குறித்து 11 மணி முதல் 12 மணி வரை கேள்வி நேரம் நடைபெறவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். மேலும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளமாறு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டர்கள். அதனை தொடர்ந்து மக்களவையில் கங்கிராஸ் அளித்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார்.

மேலும் அதன் மீது விவாதம் நடத்தபடும் என்றும் தெரிவித்திருந்தது. மேலும் சபாநாயகர்  நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதை எதிர்த்து ஆளுங்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்கள். இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு 26 கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்து.

இந்த நிலையில் மணிப்பூர் விவகாரத்தை எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.கள். கருப்பு நிற உடை அணிந்து வந்துள்ளார்கள். ஏற்கனவே இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் அலுவலகத்தில் இந்தியா கூட்டணி கட்சியினர் ஆலோசனை நடத்தினார்.

Exit mobile version