Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அசையா சொத்துக்களால் உண்டாகும் பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரம்!

ஒருவருடைய சுய ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் ராகு, கேதுக்களுக்கு சம்பந்தம் ஏற்பட்டால் வில்லங்கமான சொத்தால் பணம் முடக்கம் உண்டாகும் அல்லது மூல பத்திரம், வில்லங்கம், இவற்றின் மூலமாக வேறு யாராவது சொத்தின் மேல் உரிமை கொண்டாடுவார்கள்.

அதாவது முறையான ஆவணங்கள் இல்லாத ஒரு சொத்திற்கு பலர் உரிமை கொண்டாடுவது அல்லது சம்பந்தமில்லாத சொத்தை போலி பத்திரங்கள் தயார் செய்து விற்பவர்களிடம் சொத்து வாங்கி ஏமாற்றுவது அல்லது புறம்போக்கு நிலங்களை பட்டா போட்டு விற்பவர்களிடம் நிலம் வாங்கி ஏமாறுவார்கள் என சொல்லப்படுகிறது.

அரசாங்கத்தின் சட்ட திட்டங்களால் போலி பத்திர சொத்து விற்பனை தற்போது குறைந்திருக்கிறது. ஆனாலும்கூட இன்றும் பல போலி பத்திர வழக்குகள் நிலுவையிலிருக்கின்றன.

அதுபோல ஜாதகத்தில் சூரியனும், ராகுவும், சம்பந்தம் பெற்றால் சொத்து கோவில், சர்ச், மசூதி, உள்ளிட்டவற்றின் அருகில் இருக்கும் இதன் காரணமாக, சொத்து குறித்த வழக்கு தொடர் சட்ட சிக்கல் இருந்து கொண்டே இருக்கும்.

செத்தால் முறையான ஆவணம் இல்லாமையால் அவதிப்படுவார்கள் சனிக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரையிலான சனி ஓரையில் 21 பேருக்கு இட்லியுடன் எள் சட்னி தண்ணீருடன் தானம் கொடுக்கவும், 1 மண்டல காலத்துக்கு இதனை செய்ய வேண்டும் என சொல்லப்படுகிறது.

அல்லது செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரை செவ்வாய் ஓரையில் வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை அணிவித்து 9 நல்லெண்ணெய் தீபமேற்றி 1 மண்டலத்திற்கு வழிபட வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version