Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஏழைகளின் வயிற்றில் அடித்த திமுக! டென்ஷனான ஆளும் தரப்பு!

தேர்தல் வரும் நேரத்தில் அதிமுக அரசு மக்களுக்கு .2500 ரூபாய் வழங்குவது உள்நோக்கம் கொண்டதாக இருக்கின்றது. எனவும் அது அதிமுகவின் பணம் கிடையாது எனவும், தமிழக அரசின் பணம் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரி களிடம் எதிர்கட்சியான திமுக புகார் அளித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் ஏப்ரல், அல்லது மே, மாதங்களில் நடைபெற இருக்கின்றது, இதற்காக தேர்தல் அறிக்கை தயாரிப்பு கூட்டணி பேச்சுவார்த்தை தேர்தல் பிரச்சாரம் என்று தமிழக அரசின் பரபரப்பாகி இருக்கின்றது. இந்த நிலையில், தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா தலைமையிலான குழுவினர் சென்னைக்கு வருகை தந்திருக்கிறார்கள். சென்னை கிண்டியில் இருக்கின்ற ஐடிசி நட்சத்திர விடுதியில் இருக்கின்ற காவேரி சந்திப்பு அரங்கில் நேற்றையதினம் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது .

அதன் பிறகு செய்தியாளர்களிடம் உரையாற்றிய திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். எஸ். பாரதி தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். அந்த சமயத்தில் திமுக சார்பாக 11 கோரிக்கைகளை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்திருக்கின்றோம். அதோடு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கின்றோம். வாக்காளர் பட்டியலில் இருக்கின்றன முறைகேடுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு உரிய அதிகாரங்கள் தேவை என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

இதற்கிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில், 2 கோடியே 10 லட்சம் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு 20 கிராம் திராட்சை 20 கிராம் முந்திரி 5 கிராம் ஏலக்காய் ஒரு துணிப்பை கொடுக்கப்பட இருக்கின்றது. அதோடு பொங்கல் பரிசாக ரூபாய் 2500 வழக்கமாக வழங்கப்படும், என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார் இதற்காக ரூபாய் 5604 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த அறிவிப்பானது தேர்தலை மனதில் கொண்டு செயல்படுத்தப்பட்ட இருக்கின்றது. ஆகவே இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று திமுக சார்பாக தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. அதோடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசை திமுக தடுப்பதாக இதற்கு முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version