Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இஸ்லாம் மதத்தை அவதூறாக பேசியதால் எம்எல்ஏ வீடு சூறை:? வாகனங்கள் எரிப்பு? துப்பாக்கி சூடு?

இஸ்லாம் மதத்தை அவதூறாக பேசிய எம்எல்ஏ வீட்டின்மீது குண்டுகள் வீசியும் வாகனங்கள் எரித்தும் போராட்டம் நடந்து வருகின்றது.

கர்நாடகாவின் புளிகேஷி நகர் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாசமூர்த்தியின் உறவினர், நவீன் என்பவர் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இஸ்லாம் குறித்த அவதூறு கருத்தை ஒன்று ஷேர் செய்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்டோர் வடக்கு பெங்களூருவில் உள்ள,எம்எல்ஏ சீனிவாசமூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.மேலும் நவீனை கைது செய்ய வேண்டுமென்று போராட்டத்தில் இருந்தவர்கள் முழக்கம் எழுப்பினர்.அப்பொழுது திடீரென்று சீனிவாசமூர்த்தியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசியும் வெளியே இருந்த வாகனங்களையும் ஏரித்தும் தாக்குதல் நடத்தப்பட்டது.

https://twitter.com/nkaggere/status/1293236695131811840?s=08

https://twitter.com/nkaggere/status/1293282614766272512?s=08

இதைதொடர்ந்து அப்பகுதியில் உள்ள டிஜே ஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் தீவைத்து எரிக்கப்பட்டது.இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார்
நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

https://twitter.com/nkaggere/status/1293269417954926592?s=08

இதுகுறித்து எம்எல்ஏ
சீனிவாசமூர்த்தி மற்றும் கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ்பொம்மை ஆகியோர், பொதுமக்கள் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும் மற்றும் பிரச்சனைக்கு வன்முறை ஒரு தீர்வல்ல என்று இருவரும் தனது சமூக வலைதளங்களில் கருத்தை தெரிவித்துள்ளனர்.மேலும் வன்முறையில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுமென்று கர்நாடக உள்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.

இதனால் பெங்களூரில் பெரும் பதற்றம் நீடித்து வருகின்றது.

Exit mobile version