தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனையடுத்து தமிழக அரசு விரைவில் அது குறித்து முக்கிய முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள் தொகை மற்றும் நிர்வாக வசதிக்காக தஞ்சாவூரிலிருந்து தனியாக பிரிக்கப்பட்டு கும்பகோணம் தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்று அப்பகுதி மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் குடந்தையை மாவட்டமாக அறிவிக்கக்கோரி முதல்வருக்கு ஒரு லட்சம் தபால் அனுப்பும் போராட்டம் திருவிடைமருதூர் தபால் அலுவலகத்தில் ம.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் திரு. செராமலிங்கம் அவர்களும் திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் கோவி.செழியன் அவர்களும் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த நிகழ்வில் வர்த்தக சங்கத்தினர்,விவசாய சங்கத்தினர், ரோட்டரி சங்கம், லயன்ஸ் கிளப் சமூக ஆர்வலர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.