Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உதயநிதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்! இந்தி திணிப்பு கூடாது?

protest-led-by-udayanidhi-shouldnt-hindi-stuff

protest-led-by-udayanidhi-shouldnt-hindi-stuff

உதயநிதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்! இந்தி திணிப்பு கூடாது?

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு விளக்கம் அளித்துள்ளது.அதில் மத்திய அரசு நடத்தும் ஐ.ஐ.டி ,எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக் கழங்களான உயர்கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி மொழி மட்டுமே இருக்க வேண்டும் என்று ஆங்கில வழி கல்விக்கு பதிலாக இந்தி வழி கல்வியே கற்பிக்கப்பட வேண்டுமென்று பரிந்துரைக்படுகின்றது.

மேலும் மத்திய அரசின் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் உள்ள ஆங்கில மொழியை மாற்றி இந்தியில் மட்டுமே தேர்வு நடக்கும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் இதனை எதிர்த்து தி.மு.க இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைப்பெறுகின்றது.மேலும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.

மேலும் இதேபோல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.இந்நிலையில் தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து தி.மு.க  இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பில் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டுள்ளனர் என கூறப்படுகின்றது.

Exit mobile version