Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வரலாறு காணாத விலை உயர்வு இலங்கையில் வெடித்தது வன்முறை! கொழும்புவில் அமலான ஊரடங்கு!

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கின்ற இலங்கையில் பெட்ரோல் நிலையங்களில் பல மணி நேரம் பொதுமக்கள் காத்திருக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதோடு மின் உற்பத்திக்காக அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காத காரணத்தால், மின் விநியோகத்தில் 750 மெகாவாட் பற்றாக்குறை உண்டாகியிருக்கிறது கொழும்பு நகரில் நாளொன்றுக்கு 13 மணி நேரம் வரை மின்வெட்டு காணப்படுவதாக சொல்லப் படுகிறது.

இதன் காரணமாக, பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகையை முற்றுகையிட்டனர்.

மேலும் உடனடியாக அவர் பதவி விலக வேண்டும் என்றும், போராட்டக்காரர்கள் கோஷமிட்ட போராட்டக்காரர்கள் அங்கிருந்த தடுப்பு வேலிகளை அகற்றிய போராட்டக்காரர்கள் இராணுவ வாகனத்திற்கு தீ வைத்ததாக சொல்லப்படுகிறது.

இதன்காரணமாக, முற்றுகைப் போராட்டம் வன்முறையாக மாறிப்போனது இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலைக்க முற்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக, கொழும்புவில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கொழும்பு நகரின் வடக்கு தெற்கு மற்றும் மத்திய நுகேகொட காவல் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலிலிருக்கும் என்றும் காவல் துறையின் தலைவர் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version