கொடைக்கானலில் இந்த பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை!.. மிருகம் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு ?..

0
165
Public access to this area in Kodaikanal is prohibited!.. One person died in an animal attack?..

கொடைக்கானலில் இந்த பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை!.. மிருகம் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு ?..

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான வடகவுஞ்சி கருவேலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தான் குமரன்.இவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் இவருக்கு திருமணம் ஆகி சில வருடங்கள் ஆகிய நிலையில் இரண்டு பிள்ளைகளும் மனைவியும் உள்ளார்கள்.

குமரன் பிறந்தாளப்பட்டி பகுதியில் விறகு சேகரிக்க சென்றிருந்தார் அப்போது அங்கு அருகில் இருந்த புதரில் மறைந்திருந்த காட்டெருமை ஒன்று வேகமாக ஓடி வந்து குமரனை தாக்கியது. ஆக்கியது மட்டுமல்லாமல் பொம்மை போல் தனது கொம்பில் தூக்கி எறிந்தது.

இதில் தூக்கி வீசப்பட்ட குமரன் பலத்த காயம் அடைந்தார். இந்நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் வனச்சக்கரம் செந்தில் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் குமரனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த குமரனின் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் முதல் கட்டமாக ஐம்பதாயிரம் நிவாரணமாக வழங்கப்பட்டது.

இதில் காட்டெருமை தாக்கி தொழிலாகி உயர்ந்த சம்பவம் கருவேலம்பட்டி பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகனங்கள் கொண்டு சாலையில் நடந்த செல்லும் விலங்குகளை பார்த்து ஆங்காங்கே மரக்கட்டைகள் போல் அச்சத்தில் ஆடாமல் அசையாமல் நிற்கின்றனர். பிறகு அந்த காட்டெருமையை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டியடித்தனர்.