Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொது மக்களுக்கு எச்சரிக்கை!! இந்த மாவட்டங்களில் அடித்து நொறுக்க போகும் கனமழை!!

public-alert-chance-of-very-heavy-rain-in-these-districts

public-alert-chance-of-very-heavy-rain-in-these-districts

பொது மக்களுக்கு எச்சரிக்கை!! இந்த மாவட்டங்களில் அடித்து நொறுக்க போகும் கனமழை!!

வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தற்போது நிலவி வருவதால் மூன்று மாவட்டங்களில் மிக அதிகமான கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

எப்போதும் செப்டம்பர் மாதம் பாதியில் அதாவது  அதாவது தமிழ் மாதமான புரட்டாசி தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்கி அக்டோபர் மாதத்தில் கனமழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த சமயம் செப்டம்பர் மாதம் முடிவடைந்தும் மழை பெய்யாமல் போக்கு காட்டி வந்தது.

பொதுமக்கள் பருவமழையை எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் அக்டோபர் தொடங்கி 6 நாட்களை கடந்த பின்னர் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. எப்பொழுதும் அக்டோபர் மாதம் அடைமழை பெய்கின்ற மாதம். அதற்கு ஏற்றார் போல் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடல் பகுதிகளை ஒட்டி உள்ள மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு திசைக்கு இடைப்பட்ட வங்க கடலில் தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் கனமழைக்கு வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன.

இதை எடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் இன்று தொடங்கி வருகின்ற 11-ஆம் தேதி வரை மிதமான மழை மற்றும் கனமழை பெய்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதிலும் குறிப்பாக இன்று தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யக்கூடும். வானிலை தகவல் மையத்தின் ஆய்வுப்படி கன்னியாகுமரி, தென்காசி, மற்றும் திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மிக அதிக கனமழை பெய்யக்கூடும் என்றும் மக்கள் அதற்கு ஏற்றார் போல் தங்களை தயார் படுத்திக் கொள்ளுமாறும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version