பொதுமக்களுக்கு உஷார்!! இனிமேல் திறந்த வெளியில் இந்த காரியத்தை செய்தால் உடனடி அபராதம்!!

0
291
Public alert!! If you do this thing in the open from now on, you will be fined immediately!!

திறந்தவெளியில் முகம் சுளிக்க வைக்கும் வகையில் காரியத்தில்  ஈடுபடுபவருக்கு அபராதம் வதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நமது நாட்டில் பெரும்பாலான மக்கள் திறந்தவெளி கழிப்பிடத்தையே பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக எந்த இடம் என்று பாராமல் சிறுநீர் கழிக்கும் பணியை தயக்கம் இல்லாமல் செய்வார்கள். திறந்தவெளியில் இது போன்ற செயல்களை செய்தால் சுகாதார சீர்கேட்டினால் ஏராளமான தொற்றுநோய் பரவும் என தெரிந்திருந்தும் இந்த செயலில் ஈடுபடுவோர் அதிகம்.

இதையடுத்து இது போன்ற தகாத செயல்களை செய்பவர்களை தடுக்க நெல்லை மாவட்டத்தில் அதிரடி கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி திறந்தவெளியில் பொது இடங்களில் சிறுநீர் கழித்தாலும், மலம் கழித்தாலும் அபராதம் வசூல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மாவட்ட பேரூராட்சி பகுதிகளில் முதல் கட்டமாக நாங்குநேரி மற்றும் வடக்கு வள்ளியூர் பகுதிகளில்   இன்று முதல் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இந்த திட்டத்தின் படி பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ரூபாய் 100ம் திறந்தவெளியில் மலம் கழித்தால் ரூபாய் 500ம் அபராதம் விதிக்கப்பட்டு உடனடியாக வசூல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொது மக்கள் இனிமேல்   திறந்தவெளியை பயன்படுத்தாமல் தனிநபர் கழிப்படுத்தயோ பொதுக்கழிப்பிடத்தையோ  பயன்படுத்தி தொற்றுநோய் பரவும் அபாயத்தை  குறைக்கும் முயற்சிக்கு உறுதுணையாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.