செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு! அசத்தும் தேனி மாவட்ட ஆட்சியர்!

0
120
Public awareness about Chess Olympiad! Amazing Theni District Collector!
செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு! அசத்தும் தேனி மாவட்ட ஆட்சியர்!
சென்னை, மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டி நடைபெறவுள்ளதையொட்டி, தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று  (26.07.2022) மாவட்ட ஆட்சித்தலைவர். க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. என்.இராமகிருஷ்ணன் அவர்கள் (கம்பம்), ஆ.மகாராஜன் அவர்கள் (ஆண்டிபட்டி), கே.எஸ்.சரவணக்குமார் அவர்கள் (பெரியகுளம்) ஆகியோர் முன்னிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அந்த வகையில், செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கான மெல்லோட்டத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் . தங்க தமிழ்செல்வன் அவர்கள், தேனி-அல்லிநகரம் நகராட்சி நகர்மன்ற தலைவர் ரேணுகா பாலமுருகன், துணைத்தலைவர் எம்.செல்வம் உட்பட பலர் உள்ளனர்.